வா.. வா.. என்று கூப்பிட்ட இளைஞர்கள்.. உடனே வந்து தாக்கிய சிறுத்தை - 3 பேர் படுகாயம்

சிறுத்தையை "வா.. வா" என்று விளையாட்டாக அழைத்து வீடியோ எடுத்துள்ளனர்.திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை இவர்களை தாக்கியுள்ளது.
Leopard attack
Published on

மத்திய பிரதேசத்தில் சிறுத்தையை "வா.. வா.." என்று அழைத்து இளைஞர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுத்தை உண்மையிலேயே பாய்ந்து வந்து கடித்ததில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

உதவி சப்-இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஹா (23) மற்றும் நந்தினி சிங் (25) ஆகியோர் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோபாரு மற்றும் ஜெய்த்பூர் காடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சுமார் 50-60 பேர் சுற்றுலாவிற்கு வந்திருந்தனர்.

காட்டிற்குள் இருந்த புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தையை "வா.. வா" என்று இவர்கள் விளையாட்டாக அழைத்து வீடியோ எடுத்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை இவர்களை தாக்கியுள்ளது.

பின்னர் சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இளைஞர்களை சிறுத்தை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com