

ஆந்திராவில் 25 நாட்களில் மூன்றாவது புயலாக அக்வான் உருவாகி, தெற்கு ஒடிசாவை நோக்கி நகர்கிறது. 6 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், மக்கள் புயலின் தாக்கத்தால் அச்சத்தில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை கடந்த 25 நாட்களில் 3-வது புயலாக ‘அக்வான்’ புயல் தாக்க உள்ளது. 1970-ம் ஆண்டிற்குப் பிறகு, ஒரே மாதத்திற்குள் ஆந்திராவை மூன்று புயல்கள் அடுத்தடுத்து தாக்குவது இதுவே முதல் முறையாகும்.
அர்னாப் புயல் கடந்த அக்டோபர் 27-ந் தேதி மிகத் தீவிரப் புயலாக ஆந்திராவின் நரசாபுரம் அருகே கரையைக் கடந்தது. முரசு புயல் நவம்பர் 3-ந் தேதி நெல்லூர் மற்றும் நரசாபுரம் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. இந்த இரண்டு புயல்களாலும் 15 பேர் உயிரிழந்ததோடு, பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.
தற்போது அக்வான் புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ளது. இந்தப் புயல், தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் முதலில் மச்சிலிப்பட்டினம்-சென்னை, பின்னர் காக்கி நாடா-விசாகப்பட்டினம் கடற்கரைகளைக் கடக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும், அது ஆந்திர மாநிலத்திற்கு அருகில் வந்து திசை மாறி தெற்கு ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
இது ஆரம்பத்தில் இருந்து மணிக்கு 3 கி.மீ முதல் 9 கி.மீ வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது.
நாளை பிற்பகலுக்குள் இது புயலாக மாறி, நரசாபுரம் மற்றும் பூரிக்கு இடையேயான கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ முதல் 100 கி.மீ வரை இருக்கும். தற்போதைய பாதையின்படி, புயல் முழுவதுமாக தெற்கு ஒடிசாவை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மற்றும் பூரிக்கு இடையில் கடக்கக்கூடும். வட ஆந்திர மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருப்பதால், மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த புயல் வட ஆந்திர மாவட்டங்களை நெருங்கி வருவதால், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், அனகாபள்ளி, அல்லூரி சீதாராமராஜு மற்றும் காக்கிநாடா மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.
கிழக்கு கோதாவரி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
ஸ்ரீகாகுளம், பார்வதிபுரம் மன்யம், விஜயநகரம், விசாகப்பட்டினம், அனகாபல்லி, காக்கிநாடா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், அல்லூரி சீத்தாராமராஜு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
56 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதத்தில் 3 புயல்கள் தாக்கத்தால் ஆந்திர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.