அப்பாவுக்கும் மகனுக்கும் வயது வேறுபாடு 5: நோட்டீஸ்க்கு விளக்கம் இல்லை- பாஜக

SIR-ஐ எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் நிலையில் பாஜக அது சரியானது என்கிறது.
சம்பித் பத்ரா
சம்பித் பத்ரா
Published on: 

SIR நடவடிக்கை மூலம் நாட்டில் உள்ள 13 கோடி வாக்காளர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கு பொறுப்பேற்று ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இன்று மல்லிகார்ஜூன கார்கே வீட்டில், பாராளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யும் வகையில் மாதிரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதேவேளையில் SIR நடவடிக்கை போலி வாக்காளர்கள் மற்றும் ஊடுருவல்காரர்களை நீக்கப்படுவதற்கானது என்று ஆதரித்து வருகிறது.

இந்த நிலையில் பாஜக எம்.பி.யும், தேசிய செய்தி தொடர்பாளருமான சம்பித் பத்ரா, ஒரு விசித்திரமாக முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

திருமண 6 வருடத்தில் 12 குழந்தைகள்

இது தொடர்பாக சம்பித் பத்ரா கூறுகையில் "ஒரு தம்பதியினருக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ஆனால், அவர்களுடைய ரெக்கார்டில் 12 குழந்தைகள் உள்ளன. மற்றொரு விசயத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் வெறும் 5. உயிரியல் ரீதியாக இது எப்படி சாத்தியமாகும்.

இந்த முரண்டுபாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் நோட்டீஸ்க்கு விளக்கம் அளிக்கவில்லை. ஏராளமானவர்கள் பதில் அளிக்கவில்லை. அவர்கள் ஊடுருவல்காரர்கள். சொல்லுங்கள், ஊடுருவல்காரர்கள் நம் நாட்டில் வாக்காளர்களாக இருக்கலாமா?" என்றார்.

டெல்லியில் இந்தியா கூட்டணி நாளை பிரமாண்ட பேரணி நடத்த இருக்கிறது.

X