நாடு முழுவதும் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 22.8 சதவீதம் பேர்- தேர்தல் ஆணைய புள்ளி விபரங்களில் தகவல்

டெல்லியில் 30 முதல் 59 வயது வரை உள்ள வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.ஜார்க்கண்டில் 28.4 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 22.8 சதவீதம் பேர்- தேர்தல் ஆணைய புள்ளி விபரங்களில் தகவல்
Published on

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான மற்ற வாக்குகளில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களின் பங்கு 18 சதவீதம் மட்டுமே இருந்ததாக தேர்தல் ஆணைய புள்ளி விபரபட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 20-ந்தேதி நிலவரப்படி நாடுமுழுவதும் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையில் 22.8 சதவீதமாக இருந்தது. அதே சமயம் 60 முதல் 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் பங்கு 14.7 சதவீதமாக இருந்தது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் 18 முதல் 29 வயதுடைய இளம் வாக்காளர்களின் பங்கு 18 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. அதிகபட்சமாக அசாமில் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீத வாக்காளர்கள் உள்ளனர். இது ஜார்க்கண்டில் 28.4 சதவீதமாக உள்ளது. அதேநேரம் டெல்லியில் 30 முதல் 59 வயது வரை உள்ள வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com