

விவேக் காதலியுடன் கிரிதர் உல்லாசமாக இருந்த வீடியோ பார்த்த விவேக், ராமகிருஷ்ணா இருவரும், அந்த ஆபாச காட்சிகளை பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்க பயன்படுத்த திட்டமிட்டனர். கிரிதர் மறுத்ததால் கோபமடைந்த இருவரும், கடையில் கத்தி வாங்கி, தூங்கிக் கொண்டிருந்த கிரிதரை வீட்டிலேயே வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவரது கைரேகையால் செல்போனை திறந்து வீடியோக்களை தங்களது போனில் சேமித்து தப்பினர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் இந்திரா காலனியை சேர்ந்தவர் கிரிதர். இவர் எம்.பி.ஏ படித்துக் கொண்டு தன்னார்வலராக வேலை செய்து வந்தார். வேலை செய்யும் இடங்களில் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
இதில் சில பெண்களை காதல் வலையில் வீழ்த்தினார். அவர்களை தனிஅறைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். அதனை கிரிதர் தனது செல்போனில் வீடியோ, போட்டோக்களாக பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் கிரிதருக்கு அதே பகுதியை சேர்ந்த விவேக், ராம கிருஷ்ணா ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். பெண்களுடன் உல்லாசமாக இருப்பதில் நான் தான் சிறந்தவர்கள் என 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கிரிதரை நீ அதற்கு சரிபட்டு வரமாட்ட என கூறி கேலி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிரிதர் அந்த விஷயத்தில் தான் சிறந்தவர் எனக் கூறியபடி அவரது செல்போனில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோ, போட்டோக்களை நண்பர்களுக்கு காட்டினார்.
அந்த வீடியோவில் விவேக் காதலித்த பெண்ணுடன் கிரிதர் உல்லாசமாக இருக்கும் வீடியோவும் இருந்தது. விவேக், ராமகிருஷ்ணா இருவரும் பெண்களின் ஆபாச வீடியோக்களை தங்களுக்கு அனுப்பினால் அவர்களது பெற்றோர்களிடம் வீடியோவை காட்டி பணம் பறிக்கலாம் என தெரிவித்தனர். இதற்கு கிரிதர் எதிர்ப்பு தெரிவித்து வீடியோக்களை தர மறுத்தார்.
அவர்கள் மீண்டும் ஆபாச வீடியோக்களை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்ன கிரிதர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆபாச வீடியோக்களை தர மறுப்பு தெரிவித்ததால் கிரிதர் மீது இருவருக்கும் ஆத்திரம் ஏற்பட்டது.
அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று கத்தியை வாங்கிக் கொண்டு கிரிதர் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த கிரிதரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
பின்னர் அவரது விரல் ரேகையை வைத்து கிரிதரின் செல்போனை திறந்து அதிலிருந்து ஆபாச வீடியோ, போட்டோக்களை தங்களது செல்போனுக்கு பரிமாற்றம் செய்து கொண்டனர்.
கிரிதரின் செல்போனில் இருந்த வீடியோ போட்டோக்களை அழித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விவேக், ராமகிருஷ்ணாவை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.