அரியானாவில் பயிற்சின்போது பீரங்கி மோதி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

புழுதியால், பீரங்கியை இயக்கிய வீரருக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் பார்வைக்கு தெரியவில்லை.
அரியானா
Published on: 
Summary

அரியானாவில் ராணுவப் பயிற்சியின்போது, பீரங்கி மோதியதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அரியானா மாநிலம் ஹிசார் அருகே உள்ள போஜ்ராஜ் கிராமத்தில் நேற்று முன்தினம் ராணுவப் பயிற்சி நடைபெற்றது.

32 பீரங்கி வாகனங்களை இயக்கி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட புழுதியால், பீரங்கியை இயக்கிய வீரருக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் பார்வைக்கு தெரியவில்லை.

உயிரிழந்த வீரர்கள்

இதனால் முன்னால் நின்றிருந்த இரு வீரர்கள் மீது பீரங்கி ஏறியது. படுகாயமடைந்த இருவரும் ஹிசார் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்த வீரர்கள் உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லியைச் சேர்ந்த நாயக் மணீஷ் குமார் மற்றும் புடான் பகுதியைச் சேர்ந்த நாயக் அங்குஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் உடல்கள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

X