

திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்களை வைகுந்தம் அறைகளில் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதியில் நேற்று 69,082 பேர் தரிசனம் செய்தனர். 26,671 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.09 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது 4.05 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.