ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணியினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 14 பிழைகள்!

ஞானேஷ் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணியினர் மனு
Published on: 
Summary

ராகுல் தலைமையில் பேரணி சென்று இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 14 பிழைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தேர்தலில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மோசடி செய்ததாகவும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் பெயர்களை சட்டவிரோதமாக நீக்குவதாகவும் குற்றம்சாட்டி சிஜேபி மற்றும் இந்தியா கூட்டணி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

கடந்த வாரம் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியினர் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்றபோது பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆகாஷிவானி கட்டிடத்தின் அருகே 8 மணி நேரம் தர்ணா செய்த அவர்கள் அதன்பின் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் நேற்று இந்தியா கூட்டணியினர் ராகுல் காந்தி தலைமையில் உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.

மனுதாக்கல்

தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்களை சந்திக்க முன்னதாகவே அனுமதி மறுத்ததால் திட்டத்தை மாற்றிய இந்தியா கூட்டணியினர் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சியினர் தாக்கல் செய்துள்ள மனுவில் 14 பிழைகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிழைகள்

உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா கூட்டணியினர் தாக்கல் செய்த மனுவில், அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் கைப்பொப்பம், போதிய ஆதார ஆவணங்கள் ஆகியவை இல்லை. இதுபோன்ற 14 பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும் ரூ. 220 கட்டணம் குறைவாக செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்த்தரப்பினராகச் சேர்க்கப்பட்டது ஏன்? என்றும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும், மல்லிகார்ஜுன கார்கேவின் தெளிவான அடையாள அட்டையையும் கோரியுள்ளது.

விசாரணை இல்லை

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,இன்றைய விசாரணைப் பட்டியலில் இடம்பெறவில்லை.

குறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே மனு மீது விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com