தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு: கிராம மக்கள் புகார் மனு

தேசிய ஊரக வேலை திட்டத்தில் சரிவர வேலை மற்றும் சம்பளம் வழங்கப்படுவதில்லை, சம்பளம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு: கிராம மக்கள் புகார் மனு
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரிய வெண்மணி ஊராட்சிக்குட்பட்ட சின்னவெண்மணி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். அந்த கிராம மக்களுக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தில் சரிவர வேலை மற்றும் சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், சம்பளம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் கூறி நேற்று வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திரண்டு தங்களது ஊரக வேலை உறுதி திட்ட அட்டையை ஒப்படைப் பதற்காக வந்தனர்.

தேசிய ஊரக வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை மனுவாக எழுதி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்திலிடம் கொடுத்தனர். தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பளம் வழங்குபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். அதன் பேரில் சின்ன வெண்மணி கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.  

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com