புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- நாராயணசாமி அறிவிப்பு

புதுவை அரசு ஊழியர்களுக்கு 1.1.2019 முதல் அகவிலைப்படியை 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி அதற்கான ஒப்புதலை முதல்- அமைச்சர் நாராயணசாமி அளித்துள்ளார். #PondicherryCM #Narayanasamy
புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- நாராயணசாமி அறிவிப்பு
Published on

புதுவை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி மாதம் முதல் 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்பட்டது.

இதற்கான அரசாணை நிதித்துறையின் மூலம் வெளியிடப்பட்டு, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, அரசு ஊழியர்களின் மார்ச் மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். இதற்காக புதுவை அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3.60 கோடி கூடுதலாக செலவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com