நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் காவலாளி தீக்குளித்து தற்கொலை

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் காவலாளி தீக்குளித்து தற்கொலை
Published on: 

சென்னை:

சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (35). இவர் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பணியில் இருந்த போது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜெயபிரகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜெயபிரகாஷ் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் பணியில் இருந்து நின்று விட்டதும், பின்னர் மீண்டும் பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. அவருக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும் அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com