நன்னிலம் அருகே தொழிலாளி தற்கொலை

நன்னிலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

நன்னிலம்:

நன்னிலம் அருகே உள்ள அரும்பாக்குலம்பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 42) கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை அவரது தாய் தனலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பாஸ்கரன் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com