ஸ்பெயினின் பிசியான விமான நிலையத்தில் நிர்வாண கோலத்தில் கூலாக நடந்து சென்ற மர்ம நபர்

ஸ்பெயினின் பிசியான விமான நிலையங்களுள் ஒன்றான சன் சாண்ட் ஜோன் விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நிர்வாண கோலத்தில் கூலாக நடந்து சென்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்பெயினின் பிசியான விமான நிலையத்தில் நிர்வாண கோலத்தில் கூலாக நடந்து சென்ற மர்ம நபர்
Published on

ஸ்பெயின் நாட்டின் மஜோர்கா தீவில் உள்ள பிசியான விமான நிலையங்களுள் ஒன்றான சன் சாண்ட் ஜோன் விமான நிலையத்தின் வெளிநாட்டு பயணிகள் வருகை தரும் அரங்கு ஒன்றில், வெளிநாட்டு பயணி ஒருவர் உடலில் துணியின்றி நிர்வாண கோலத்தில் அலைந்து திரிந்த காட்சி விமான நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

தனது உடைகளை கலைந்து விட்டு நிர்வாணமாக நடந்து சென்ற அந்த மர்ம நபர், கையில் பயண பைகள் ஏதுமில்லை. மாறாக வருகை அறைக்குள் சுற்றித்திரிந்து அந்த நபர், பின்னர் அருகிலிருந்த கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், வருகை பகுதிக்கு சென்று பார்த்த போது, அந்த நபர் அங்கில்லை. நிர்வாணமாக சுற்றித்திரிந்த மர்ம நபர் எங்கு சென்றார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த மர்ம நபர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல என்பதும், கடைசியாக வந்த மான்செஸ்டர் விமானத்தில் இருந்து வந்திருப்பதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com