செங்குன்றத்தில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

செங்குன்றத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

செங்குன்றம்:

செங்குன்றம் கிராண்ட் லைன் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் இளவரசு. இவரது மகள் கவிதா (21) பட்டதாரி. இவர் 10 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து கடந்த வாரம் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் மீண்டும் காய்ச்சல் வந்தது. எனவே, செங்குன்றம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். என்றாலும், காய்ச்சல் குணமாகவில்லை. எனவே சில தினங்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com