காங்கயத்தில் மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலி

காங்கயத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.
காங்கயத்தில் மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலி
Published on

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்திசாமி. இவர் காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளியின் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் ரஞ்சித் குமார் (16). காங்கயம் அருகே உள்ள படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த வாரம் ரஞ்சித் குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஒரு நாள் மட்டும் சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பினார். ஆனால் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர்.

அதன் பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com