சாத்தூர், வாடிப்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை, பெண் பலி

மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை மற்றும் பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர், வாடிப்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை, பெண் பலி
Published on

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள கண்மாய் சூரங்குடியைச் சேர்ந்தவர் குமார் (வயது 34). இவரது மனைவி மாரீஸ்வரி (27). இவர்களுக்கு கதிர்பாண்டி என்ற ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது.

சில தினங்களாக குழந்தைக்கு காய்ச்சல் இருந்து வந்தது. சிகிச்சைக்காக ஏழாயிரம் பண்ணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காய்ச்சல் அதிகமாகவே சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். பின்னர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

நேற்று மாலை குழந்தை கதிர்பாண்டிக்கு வலிப்பு வரவே சாத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள சின்னம நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் நந்தினி (வயது 22). இவர் தாதம்பட்டியில் உள்ள ஜவுளி பூங்காவில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

2 தினங்களுக்கு முன்பு நந்தினி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டார். அதன் பின்னர் அவரை, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை நந்தினி பரிதாபமாக இறந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com