

புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தபோது, அதிகாரத்தை அனுபவித்தனர். இப்போது எதிர்க்கட்சியாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
ஊழலுக்கு எதிரான எனது போரில் சமரசத்துக்கு இடமில்லை. ஊழலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது. எனக்கென்று உறவினர்கள் யாரும் இல்லை.
அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது சரியான மாற்றாக இருக்க முடியாது. மக்களின் நம்பிக்கைக்கும் லட்சியங்களுக்கும் பா.ஜ.க. மையமாகிவிட்டது. கட்சி தலைவர்கள், மக்களின் பிரச்சனைகளுக்கும் அரசுக்கும் இடையே இணைப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.