தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது: முத்தரசன் பேட்டி

காவிரி, பாலாறு, நீட் போன்ற பிரச்சினைகளில் தமிழ் நாட்டுக்கு எதிராக மத்திய அரசு துரோகம் செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது: முத்தரசன் பேட்டி
Published on

தஞ்சாவூர்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற தலைப்பில் 6 பிரசார பயணக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறது.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் உறுப்பினர்கள் பத்மாவதி, சிவபுண்ணியம், செங்கோடன், மணிவாசகம், செல்வராஜ் ஆகியோர் அடங்கிய பிரசார பயணக்குழு தஞ்சை வந்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலத்தில் 6 முனைகளிலிருந்து கடந்த மாதம் 29-ம் தேதி பிரசார இயக்கம் புறப்பட்டது. இந்த இயக்கம் திருச்சியில் 5-ந் தேதி நிறைவடைகிறது. இந்த தேசத்துக்கு பாசிக சக்திகளால் ஏற்படவுள்ள ஆபத்தை தமிழக மக்கள் உணர்ந்துள்ளதால் இக்குழுக்களை மக்கள் எழுச்சியுடன் வரவேற்கின்றனர்.

காவிரி, பாலாறு, நீட் போன்ற பிரச்சினைகளில் தமிழ் நாட்டுக்கு எதிராக மத்திய அரசு துரோகம் செய்கிறது. தமிழக அரசு தார்மீக பலத்தை இழந்து விட்டதால் மத்திய அரசு எதைக் கூறினாலும் ஏற்கிறது. பதவி ஒன்றே குறிக்கோளாக இருப்பதால் மக்கள் பிரச்சினை பற்றி கவலைப்படுவதில்லை. இதனால் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், பொதுச் செயலாளர் அயனாவரம் முருகேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மனோகரன் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com