

முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
இட்லி அரிசி - 200 கிராம்,
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு சிறிய கிண்ணம்,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - இரண்டு,
மிளகு - 10,
எண்ணெய் - 100 மில்லி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முருங்கை கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இட்லி அரிசியை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசியைக் களைந்து கரகரப்பாக அரைக்கவும்.
காய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு, பருப்புகளை சேர்த்து அரைத்து, அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
அடுத்து மாவில் முருங்கைக்கீரையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கு ஊற்றுவதைவிட சிறிது அதிகம் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
சூப்பரான சத்தான முருங்கைக்கீரை அடை ரெடி.