கொட்டி தீர்த்த கனமழை.. குடும்பத்தை இழந்து தனியாக தவிக்கும் 8 வயது சிறுமி

மும்பையில் கொட்டி தீர்த்த வரலாறு காணாத கனமழைக்கு, குடும்பத்தில் இருந்த அனைவரையும் பலிகொடுத்துவிட்டு 8 வயது சிறுமி ஒருவர் தவித்து வருகிறார்.
சிறுமி பிரியா - மீட்புப் பணியில் பேரிடர் மீட்புப் படையினர்
சிறுமி பிரியா - மீட்புப் பணியில் பேரிடர் மீட்புப் படையினர்
Published on

மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று 100 மிமீ மழை பெய்துள்ளது. அவசர சேவைகள் மட்டும் செயல்படுகின்றன. மேலும் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து இந்த மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் மாயமாகினர். இவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இடிபாடுகளில் சிக்கி, மீண்ட சிறுமி பிரியாவின் தாய், தந்தை, சகோதரி என அனைவரும் பலியாகினர். சிறிய வயதில் குடும்பத்தையே இழந்து அப்பகுதியில் தவித்து வரும் பிரியாவை கண்டு அப்பகுதி மக்கள் கண் கலங்கி உள்ளனர்.

பிரியாவின் உறவினர்கள் மும்பையில் வசிக்கின்றனர். அவர்கள் இறந்த பிரியாவின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்கு செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

பிரியாவின் தங்கையை காப்பாற்ற பேரிடர் மீட்புப் படையினர் கடுமையாக போராடியுள்ளனர். இறுதியில், சடலமே கிடைத்தது என அதிகாரிகள் கூறியது அப்பகுதி மக்களை  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com