மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரசுக்கு 4-வது நபர் பலி

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்கு கொரோனாவுக்கு 4வது நபர் இறந்துள்ளார்.
தாராவி குடிசைப்பகுதியில் பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர்.
தாராவி குடிசைப்பகுதியில் பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர்.
Published on

மும்பை:

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் 1574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 110 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் 3 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் இறந்துள்ளார். கஸ்தூர்பா மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர் இறந்ததையடுத்து, தாராவியில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

தாராவியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதால், சமூக பரவலை தடுக்க அங்குள்ள 7.5 லட்சம் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com