புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி 4வது இடம் பிடித்தது மும்பை

புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய யு மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது.
அரியானா வீரரை தடுக்கும் மும்பை வீரர்கள்
அரியானா வீரரை தடுக்கும் மும்பை வீரர்கள்
Published on

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் இன்று இரவு நடந்த 130-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் யு மும்பை அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 15-15 என சமனிலை வகித்தன. இரண்டாவது பாதியில் யு மும்பை அனி வீரர்கள் அதிரடி காட்டினர்.

இறுதியில், 39 - 33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்திய யு மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் யு மும்பை அணி 69 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com