பெனாசிர் பூட்டோ மகனுக்கு காதல் வலை விரிக்கும் பெண்: சந்திக்க அனுமதி மறுத்த அதிகாரிகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும் பாகிஸ்ஹான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு காதல் வலை விரிக்கும் பெண்ணைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பெனாசிர் பூட்டோ மகனுக்கு காதல் வலை விரிக்கும் பெண்: சந்திக்க அனுமதி மறுத்த அதிகாரிகள்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ பூட்டோவையும், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை பெண் மந்திரி ஹினா ரப்பானி என்பவரையும் இணைத்து முன்னர் அந்நாட்டு ஊடகங்களில் கிசுகிசுக்கள் வெளியாகின. 

ஏற்கனவே திருமணமான ஹினா ரப்பானியை பிலாவல் ரகசியமாக சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருப்பது போலவும், முத்தமிட்டுக் கொள்வது போலவும் சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்களும் வெளியாகின.

இதற்கிடையில், தகுந்த பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கடந்த ஆண்டு பிலாவல் (28) குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்தப் பெண்ணை முதலில் எனது சகோதரிகளுக்கு பிடித்திருக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட முல்தான் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண், பிலாவல் பூட்டோவை உயிருக்குயிராய் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தற்போது தெரிவித்துள்ளார்.

இந்த ஒருதலை காதலின் விளைவாக தனது வருங்கால கணவருக்காக சில பரிசுப் பொருட்களையும் எடுத்துவந்த அந்தப் பெண் இஸ்லாமாபாத் நகரில் உள்ள பிலாவல் பூட்டோவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் விபரத்தை கூறியும் உள்ளே அனுமதிக்க மறுத்த பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணை திருப்பி அனுப்பி விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com