முக்கொம்பு அணையை நாளை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்

முக்கொம்பு அணையை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை 2-ந்தேதி மாலை திருச்சி வருகிறார். #mukkombudam
முக்கொம்பு அணையை நாளை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்
Published on

திருச்சி:

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை மதகு உடைந்ததை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடைந்த அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு புதிய அணை கட்ட உத்தரவிட்டு சென்றுள்ள நிலையில் தற்போது தற்காலிக அணை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முக்கொம்பு அணையை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை 2-ந்தேதி மாலை திருச்சி வருகிறார். இரவில் திருச்சியில் தங்கும் அவர் மறுநாள் திங்கட்கிழமை காலை முக்கொம்பு கொள்ளிடம் அணையை பார்வையிட செல்கிறார்.

அவருடன் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகன், திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, மற்றும் எம்.எல்.ஏக்கள் செல்கின்றனர்.  #mukkombudam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com