மத்தியப் பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 5 பெண்கள் பலி

மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் இன்று டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 5 பெண்கள் பலி
Published on

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் ரத்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டிராக்டரில் ராஜஸ்தான் மாநிலம் கார்கோடா கிராமத்தில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளனர். தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது இன்று காலை ரத்லம் மாவட்டம் டால்-லாசுடியா சாலையில் விபத்துக்குள்ளானது.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் டிராக்டர் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் டால் பகுதியில் உள்ள வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com