சண்முகாபுரத்தில் மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெயிண்டர் பலி

சண்முகாபுரத்தில் மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில் பெயிண்டர் பலியானார்.
விபத்து
விபத்து
Published on

புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் தசரதகுமரன் (வயது 62). பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் வாழைப்பழம் வாங்குவதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார். சோனியா காந்தி நகரில் வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மின் கம்பத்தில் மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட தசரதகுமரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக காரில் வந்தவர்கள் தசரத குமரனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரி சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தசரதகுமரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது மகன் ஹரிகரசண்முகம் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com