புரசைவாக்கம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 பேர் படுகாயம்

புரசைவாக்கம் மேம்பாலத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புரசைவாக்கம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 பேர் படுகாயம்
Published on

சென்னை:

புரசைவாக்கம் எஸ்.எஸ். புரத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி சகாயமேரி, மகள் நிரஞ்சனி. தாய்-மகள் இருவரும் நேற்று இரவு புரசைவாக்கம் மேம் பாலத்தில் டானாதெரு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது எதிர் திசையில் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஸ்ரீதர் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

பாலம் 2 ஆக பிரியும் இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் 3 பேரும் பாலத்தின் மேல் விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

நினைவு திரும்பாத நிலையில் அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com