மோட்டார் சைக்கிள்கள் மோதல் - ஜோதிடர் உள்பட 2 பேர் பலி

வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியான ஜோதிடர் சுரேஷ் - ஆவுடையப்பன்
பலியான ஜோதிடர் சுரேஷ் - ஆவுடையப்பன்
Published on

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டியைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 50). விவசாயி. இவர் நேற்று இரவு மல்வார்பட்டியில் இருந்து மாரம்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது வேடசந்தூர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிடர் சுரேஷ் (வயது 38), மற்றொரு மோட்டார் சைக்கிளில் மாரம்பாடியில் இருந்து அய்யம்பாளையம் நோக்கி வந்து கொண்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்களும் மாரம்பாடி பிரிவு அருகே எதிர் எதிரே நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் சம்பவ இடத்திலேயே ஆவுடையப்பன் உயிரிழந்தார். படுகாயமடைந்த சுரேஷ் ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com