தாய்-மகள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர் அருகே தாய்-மகள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவெண்ணைநல்லூரில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாய்-மகள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டம்
Published on

திருவெண்ணைநல்லூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூரில் ஆராயி என்பவர் வீட்டுக்குள் புகுந்து மர்மகும்பல் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஆராயி, மகள் தனம், மகன் சமயன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சமயன் பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், ஆராயி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி இன்று காலை திருவெண்ணைநல்லூர் கள்ளுக்கடை சந்திப்பில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு ஒன்றிய செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com