தீபா பேரவை சார்பில் மேலும் 5 லட்சம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல்

தீபா பேரவை சார்பில் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி மேலும் 5 லட்சம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டது.
தீபா பேரவை சார்பில் மேலும் 5 லட்சம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல்
Published on

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது. சின்னத்தை பெற அ.தி.மு.க. (அம்மா) அணியினரும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியினர் பிரமாண பத்திரங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர்.

இவர்களுக்கு போட்டியாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி இதற்கு முன்பு 52 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மேலும் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய தங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் அனுமதியும் கோரினர்.

அதன் அடிப்படையில் தீபா பேரவை சார்பில் நேற்று மேலும் 5 லட்சம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டன. பேரவையின் தலைமை செய்தி தொடர்பாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. கபிலர்மலை சரஸ்வதி உள்ளிட்டோர் இந்த பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com