கோரிமேடு அருகே சீட்டு பண தகராறில் பெண்ணை தாக்கி மானபங்கம்: 4 பேருக்கு வலைவீச்சு

கோரிமேடு அருகே சீட்டு பண தகராறில் பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

புதுச்சேரி:

கோரிமேடு அருகே சஞ்சீவிநகர் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புரந்தரதாசன். இவரது மனைவி ஜெயந்தி (வயது 47). இவர் ஏலச் சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணனின் மனைவி கலா ஏலச்சீட்டு கட்டி வந்தார். அந்த வகையில் கலாவுக்கு ரூ.75 ஆயிரம் தர வேண்டி இருந்தது.

அதுபோல் ஜெயந்திக்கு கலாவின் தாய் ராணி ரூ.75 ஆயிரம் கொடுக்க வேண்டி இருந்ததால் கலாவுக்கு ஜெயந்தி பணம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஜெயந்தி நேற்று இரவு மகள் புவனாவுடன் அப்பகுதியில் உள்ள கோவில் பகுதிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கலா, அவரது மகன் சசிக்குமார் மற்றும் இவரது நண்பர்கள் ஏழுமலை, பிரபாகரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து ஜெயந்தியை தாக்கி அவரை மானபங்கப்படுத்தினர். மேலும் இதனை தடுக்க முயன்ற ஜெயந்தியின் மகள் புவனாவையும் அவர்கள் தாக்கினர்.

இது குறித்து ஜெயந்தி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கலா உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com