தாடி, மீசையுடன் கூடிய மோனா லிசா ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலம்

பாரிஸில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் மோனா லிசாவிற்கு தாடி இருப்பது போன்ற ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தாடி, மீசையுடன் கூடிய மோனா லிசா ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலம்
Published on

பாரிஸில் சோதபே என்ற ஓவிய விற்பனை நிறுவனம் நடத்திய ஓவியக் கண்காட்சியில் பல புதிய ஓவியங்கள் வைக்கப்பட்டன. அவற்றில் பல ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன.

இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மறுஉருவாக்க ஓவியமும் இந்த ஏலப் பட்டியலில் இடம் பெற்றது. ஓவியர் மார்செல் டச்சம்ப் இதனை வரைந்து ஏலத்திற்கு வைத்திருந்தார். தாடி, மீசை கொண்ட இந்த மோன லிசா ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

மோனா லிசா ஓவியம், வரலாற்றுப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்டது. இந்த ஓவியத்தை மார்செல் டச்சம்ப் சிறிது மாற்றம் செய்து 1964ம் ஆண்டு வரைந்துள்ளார். இந்த ஓவியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com