நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- காயத்தால் முகமது அப்பாஸ் விலகல்

தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அப்பாஸ் 3-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். #PAKvNZ
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- காயத்தால் முகமது அப்பாஸ் விலகல்
Published on

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

3-வது போட்டியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக முகமது அப்பாஸ் திகழ்ந்து வருகிறார். இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று முதல் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் கடைசி டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். ஆனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது அப்பாஸிற்குப் பதிலாக சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com