ரஷியா விமான விபத்தில் 71 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல்

ரஷியாவின் மாஸ்கோவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 71 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #Russia #MoscowPlanecrash #Modi
ரஷியா விமான விபத்தில் 71 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல்
Published on

ரஷியாவின் மாஸ்கோவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 71 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து ஆர்ஸ்க் நகருக்கு இன்று உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள், 6 விமான குழுவினருடன் புறப்பட்டது.

ஆனால், சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்து விமானம் காணாமல் போனது. விசாரணையில், மாஸ்கோவின் அர்குனோவோ பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 71 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரஷியாவில் விமான விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com