அமெரிக்க கூட்டத்தில் தமிழில் பேசிய மோடி

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய மோடி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பேசியது பார்வையாளர்களை மகிழ்ச்சியை ஆழ்த்தியது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

ஹூஸ்டன் :

ஹூஸ்டன் பொதுக்கூட்டத்தில் முதலில் மோடி சிறிது நேரம் பேசி முடித்ததும், பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசினார். டிரம்ப் தனது உரையை முடித்த பிறகு, மோடி மீண்டும் பேசினார். டிரம்ப் முன்வரிசையில் அமர்ந்து மோடியின் பேச்சை கேட்டு ரசித்தார்.

முதலில் ஆங்கிலத்தில் உரையாற்றிய மோடி, பின்னர் பேசும்போது இந்தியில் பேசினார். அவரது இந்தி உரையை கேட்ட கூட்டத்தினர் கைதட்டி மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர்.

மோடி தனது பேச்சின்போது தமிழ் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் பேசினார். தமிழில் பேசும்போது ‘எல்லாம் சவுக்கியமா?’ என்று கூட்டத்தினரை பார்த்து கேட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த திரளான தமிழர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com