வாரணாசியில் மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? - மம்தா சவால்

வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். #Modi #Rajnath #Mamata
வாரணாசியில் மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? - மம்தா சவால்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி இரு இடங்களில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். மேற்கு வங்காளம் மாநில மக்கள் இங்கு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். 

இதேபோல், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இம்மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கடுமையாக தாக்கிப் பேசினார்.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் இன்று மாலை பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு தலைவர்களே இல்லை என்று குறிப்பிட்டார்.

வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்துவந்து இங்கு பா.ஜ.க.வினர் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். இந்த மண்ணின் கலாசாரம் பற்றியும், மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. வெளியில் இருந்து இங்கு வருபவர்கள் எல்லாம் இன்று இருந்துவிட்டு நாளை ஓடிப்போவார்கள்.

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு முன்னர் முதலில் அவரவர்கள் வேலையை அவர்கள் கவனிக்க வேண்டும். மோடி டெல்லியில் தனது வேலையை கவனித்துக் கொள்ள வேண்டும். யோகி ஆதித்யாநாத் உத்தரபிரதேசம் மாநிலத்தை கவனிக்க வேண்டும்.

மேற்கு வங்காளத்தை நாங்கள் கவனித்துக் கொள்வோம். வெளியில் இருந்து வரும் பா.ஜ.க. தலைவர்கள் இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. முதலில் வரும் தேர்தலில் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா? என்பதை மோடி நினைத்துப் பார்க்கட்டும் எனவும் மம்தா தெரிவித்தார். #Modi #Rajnath #Mamata

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com