குடியரசு தினவிழா பாதுகாப்பு: காஷ்மீரில் மொபைல் இண்டர்நெட் சேவை தற்காலிக ரத்து

குடியரசு தினவிழா பாதுகாப்பை முன்னிட்டு, காஷ்மீரில் இன்டர்நெட் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். #Kashmir #RepublicDay
குடியரசு தினவிழா பாதுகாப்பு: காஷ்மீரில் மொபைல் இண்டர்நெட் சேவை தற்காலிக ரத்து
Published on

ஸ்ரீநகர்:

குடியரசு தினவிழா பாதுகாப்பை முன்னிட்டு, காஷ்மீரில் இன்டர்நெட் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதிலும் குடியரசு தினவிழாவை இன்று வெகு விமரிசையாக கொண்டாட உள்ளது. அதன்  ஒரு பகுதியாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் சர்ச்லேனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் குடியரசு தினவிழா இன்று காலை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், குடியரசு தினவிழா பாதுகாப்பை முன்னிட்டு காஷ்மீரில் மொபைல் இன்டர்நெட் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடியரசு தினவிழாவை சீர்குலைக்கும் வகையிலான எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விழா நடக்க உள்ள பகுதியில் வருபவர்களிடம் சோதனை நடத்தவும், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிபவர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com