டி.வி., ஏ.சி., வாஷிங்மிஷின் பர்னிச்சர்கள் விலை உயரும்: எச்.வசந்தகுமார்

ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வருவதால் வீட்டு உபயோக பொருட்களான டி.வி., ஏ.சி., வாஷிங்மிஷின், பிரிட்ஜ், கிரைண்டர், பர்னிச்சர்கள் ஆகியவை விலை உயரும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் கூறினார்.
டி.வி., ஏ.சி., வாஷிங்மிஷின் பர்னிச்சர்கள் விலை உயரும்: எச்.வசந்தகுமார்
Published on

சென்னை:

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், வசந்த் அன்ட்கோ நிறுவனருமான எச்.வசந்த குமார் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வருவதால் வீட்டு உபயோக பொருட்களான டி.வி., ஏ.சி., வாஷிங்மிஷின், பிரிட்ஜ், கிரைண்டர், பர்னிச்சர்கள் ஆகியவை விலை உயரும்.

டி.வி., ஏ.சி., வாஷிங் மிஷின், பிரிட்ஜ் போன்ற பொருட்களுக்கு ஏற்கனவே உற்பத்தி வரி உள்பட 27 சதவீதம் தான் இந்த பொருட்களுக்கு வரி உள்ளது. இனி 28 சதவீதம் வரி செலுத்த வேண்டி வரும்.

அதே போல் பர்னிச்சர் ரகங்களுக்கு 12.5 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. கிரைண்டருக்கு 5 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக வரி உயருகிறது. எனவே இந்த பொருட்கள் எதுவும் விலை உயருமே தவிர குறைவதற்கான வாய்ப்புகள் கிடையாது.

கிரைண்டருக்கான வரியை 5 சதவீதமாகவும், பர்னிச்சருக்கான வரியை 12.5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com