இன்று இரவு மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு வார பயணமாக இன்று இரவு லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.
இன்று இரவு மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்
Published on

சென்னை

சட்டசபைக் கூட்டத் தொடர் மற்றும் முரசொலியின் பவளவிழா பொதுக்கூட்டம் முடிவடைந்ததும் வெளிநாடு செல்ல தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, திட்டமிட்டபடி மு.க.ஸ்டாலின் இன்று இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் செல்கிறார். அங்கிருந்து லண்டன் செல்கிறார். அவருடன் அவரது மருமகன் சபரீஷ் செல்கிறார். ஒரு வார காலம் வெளி நாட்டில் இருந்து விட்டு சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com