முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல்

டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #MKStalin
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் உள்பட நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு நாட்டிற்கும், பன்முகத்தன்மைக்கும் பேரிழப்பு. தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றும் வாஜ்பாய் பெயரை நினைவுபடுத்தும். ஜனநாயகத்தின் பக்கம் நின்று தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடிய வாஜ்பாய் அவர்களின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #MKStalin

X

Maalai Malar
www.maalaimalar.com