காரிமங்கலத்தில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

காரிமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தி.மு.க வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
காரிமங்கலத்தில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
Published on

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் மொரப்பூர் ரோட்டில் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மணி, மாவட்ட அவைத்தலைவர்  மாதையன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கே.ஜி.மகேஷ்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அன்பழகன், நகர தலைவர் சீனிவாசன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் அருள், துணை அமைப்பாளர் வேலன், சீனிவாசன், வசந்த், விஸ்வான், மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com