சிங்கம்போல் எழுந்து நின்று பேசக் கூடியவர்- ஜெ.அன்பழகன் குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
Published on

சென்னை:

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 10-ந்தேதி உயிரிழந்தார். ஜெ.அன்பழகனின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது தந்தை ஜெயராமன் கல்லறை அருகே குழி தோண்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அறிவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இவருடன் இளைஞரணி கழக தலைவர் உதயநிதி மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஜெ.அன்பழகன் படத்திறப்பை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் சிங்கம்போல் எழுந்து நின்று பேசக் கூடியவர்; மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக பேசக் கூடியவர் ஜெ.அன்பழகன். சென்னைக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தி.மு.க.வுக்கே ஜெ.அன்பழகன் மறைவு பெரும் இழப்பு. ஜெ.அன்பழகன் மறைவு தனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு. இன்று மிகவும் சோர்ந்த மனநிலையில் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன். எதையும் சரி என்றால் பாராட்டுவார், தவறென்றால் விமர்சிப்பார். கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்களை பிரமாண்டமாக நடத்தியவர்.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com