மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்: கொளத்தூரில் வெள்ள நிவாரணப் பணிகளை இன்று பார்வையிடுகிறார்

சார்ஜாவில் 2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்: கொளத்தூரில் வெள்ள நிவாரணப் பணிகளை இன்று பார்வையிடுகிறார்
Published on

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

கொளத்தூர் தொகுதியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்து வெள்ள நீரை வெளியேற்ற அறிவுறுத்தினார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

மேலும் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கொடுங்கையூரில் 2 சிறுமிகள் உயிர் இழந்த வீட்டிற்கு சென்று அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் சார்ஜாவில் நடந்த சர்வதேச புத்தக திருவிழாவில் பங்கேற்க அந்த நாட்டு அரசு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் சார்ஜா சென்று அந்த விழாவில் பங்கேற்றார்.

சார்ஜா அரசின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் 1000 புத்தகங்களையும் நன்கொடையாக வழங்கினார். 2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.


இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை இன்று மீண்டும் பார்வையிடுகிறார். மாலை 4 மணிக்கு அவர் தொகுதிக்கு சென்று மழை வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிகிறார். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை முடுக்கி விடுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com