ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்- முக ஸ்டாலின் வேண்டுகோள்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பணிகளில் ஈடுபட வேண்டியதிருப்பதால், ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைக்கும்படி முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #DMK #MKStalin #JactoJio #GajaCyclone
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்- முக ஸ்டாலின் வேண்டுகோள்
Published on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பல்வேறு நியாயமான நடைமுறைக்கேற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தியும், அப்போராட்டங்களை அ.தி.மு.க. அரசு காதில் போட்டுக் கொள்ளவோ கண்டு கொள்ளவோ செய்யாமல் முற்றிலும் அலட்சியப்படுத்தியதன் விளைவாக, வருகின்ற டிசம்பர் 4-ந் தேதியிலிருந்து காலவரையற்றப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் அறவழிப் போராட்டம் முழுக்க முழுக்க நியாயமானது என்றாலும், கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பணிகளில் ஈடுபட வேண்டியதிருப்பதால், வருகிற டிசம்பர் 4-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், கழக ஆட்சி அமைந்திடும் நல் வாய்ப்பு செயலாக்கம் பெற்றதும், இதுமாதிரி எவ்வித போராட்டங்களும் நடத்தாமலேயே ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் நியாயமான கோரிக்கைகள் குறித்துக் கலந்துபேசி நிறைவேற்றித் தரப்படும் என்பதையும் தி.மு.க.வின் சார்பில் உறுதியளிக்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com