முதலாண்டு நினைவு தினம் - கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினத்தில், மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி
Published on

சென்னை:

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தி.மு.க. சார்பில் சென்னை வாலாஜா சாலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி இன்று காலை தொடங்கியது.

இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இறுதியாக, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தை பேரணி அடைந்தது.

கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் மரக்கன்றையும் நட்டார்.

துரைமுருகன், கனிமொழி எம்.பி, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணியில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com