கதிராமங்கலத்தில் மு.க. ஸ்டாலின் - கலங்கிய குடிநீரை காண்பித்து பெண்கள் கண்ணீர்

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பாதிப்பு குறித்து கிராம மக்களிடம் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கருத்துகளை கேட்டறிந்தார்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பாதிப்பு குறித்து கிராம மக்களிடம் மு.க. ஸ்டாலின் கருத்து கேட்ட போது எடுத்த படம்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பாதிப்பு குறித்து கிராம மக்களிடம் மு.க. ஸ்டாலின் கருத்து கேட்ட போது எடுத்த படம்.
Published on

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 21-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பாதிப்பு குறித்து தி.மு.க. செயல் தலைவரும் , சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கதிராமங்கலம் வந்து பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.

அவரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். அப்போது எண்ணெய் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்து வைத்திருந்த பெண்கள் அதனை மு.க.ஸ்டாலிடம் காண்பித்து பெண்கள் கண்ணீர் வடித்தனர்.

மேலும் ஓ.என்.ஜி.சி. பணியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வேதனையுடன் கூறினர். அதனை பொறுமையாக கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலின் இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.க. போராடும் என்றார்.

72 நாட்களாக கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தி வரும் மக்களை காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

மு.க.ஸ்டாலினும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் கோவி.செழின், அன்பழகன் முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com