வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டன- ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி

தமிழகத்தில் இருந்த அரசியல் தலைமைக்கான வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டதாக துரைமுருகன் கூறியுள்ளார்.
துரைமுருகன்
துரைமுருகன்
Published on

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது,  தமிழகத்தில் சரியான, ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது, என்று கூறினார். 

இதுபற்றி திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதாவது:-

வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம்; தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டன. 

தமிழகத்தின் தட்பவெப்ப அரசியல் குறித்து ரஜினிக்கு தெரியவில்லை. ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com