வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின்

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

வெங்காயம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருவது பொதுமக்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்துள்ளது. பல்லாரி வெங்காயம் விலை உயருகிறதே என்று சாம்பார் வெங்காயத்தை பயன்படுத்திய மக்கள், இப்போது அதன் விலையும் உயர்ந்திருப்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் புலம்புகிறார்கள். 

இந்நிலையில், வெங்காயத்தின் அவசியத்தை உணர்ந்து, விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது. அரசு வெங்காயத்தின் அவசிய தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com