கோவையில் பலியான சாப்ட்வேர் என்ஜினீயர் ரகுபதி குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

கடந்த 25-ந் தேதி கோவை அரசு மருத்துவகல்லூரி அருகே விபத்தில் பலியான சின்னியம்பாளையத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ரகுபதி வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கோவையில் பலியான சாப்ட்வேர் என்ஜினீயர் ரகுபதி குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்
Published on

தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் தம்பி மகள் வித்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதையடுத்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை ஜி.வி. ரெசிடென்சியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வித்யாவின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் தம்பி மகள் வித்யா படத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து ராமநாதபுரம் மற்றும் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள கட்சியின் முன்னாள் எம்.பி.க்கள் இரா. மோகன். மு.ராமநாதன் ஆகியோரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

கடந்த 25-ந் தேதி கோவை அரசு மருத்துவகல்லூரி அருகே விபத்தில் பலியான சின்னியம்பாளையத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ரகுபதி வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, சுப்புலட்சமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன், இளித்துரை ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் முத்துசாமி, தமிழ்மணி, சி.ஆர். ராமச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com