இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வோம் - மு.க அழகிரி பேட்டி

திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வோம் என மு.க அழகிரி மதுரையில் பேட்டியளித்துள்ளார். #DMK #MKStalin #MKAlagiri
இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வோம் - மு.க அழகிரி பேட்டி
Published on

மதுரை:

தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வது சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம், வேட்பு மனுவை ஸ்டாலின் அளித்துள்ளார்.  அவருக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். இதேபோன்று பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தது பற்றி மதுரையில் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த அவர், ஸ்டாலின் தலைவராவதற்கு என்னை முன்மொழிய சொல்கிறீர்களா? என பதில் கூறினார்.

தொடர்ந்து மு.க. அழகிரி கூறும்பொழுது, இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்வோம். போட்டியிடுவோம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com